ரூ.3 கோடி கடல் அட்டை

ரூ.3 கோடி கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.3 கோடி கடல் அட்டை
Published on

கீழக்கரை, 

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல் வாழ் பாதுகாக்கப்பட்ட உயிரினமான கடல் அட்டைகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் கீழக்கரை பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்த. அவருடைய உத்தரவின் பேரில் கடல்சார் உயர் இலக்கு படை வனவர் ராமச்சந்திரன், வனபாதுகாப்புபடை வனவர் சிவசுப்ரமணியன், வனக்காப்பாளர் விஜயராகவன் அடங்கிய குழுவினர் கீழக்கரை நத்தம் கிராமம் வையான் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக 690 கிலோ கடல் அட்டைகள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.3 கோடி எனக்கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தேவிப்பட்டினத்தை சேர்ந்த ஒருவரையும், நத்தம் வையான் கிராமத்தை சேர்ந்த ஒருவரையும் வனத்துறயினர் தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com