புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

மூலைக்கரைப்பட்டி அருகே புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது
புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
Published on

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேலமுனைஞ்சிப்பட்டி மெயின் ரோட்டில் ஹரிகிருஷ்ணன் மகன் ஆறுமுகம் (வயது 34) என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு 40 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com