மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

விருதுநகர் அருகே மளிகை கடையில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
Published on

விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தை கிழக்கு தெருவில் மளிகை கடை வைத்திருப்பவர் கோடீஸ்வரன்(வயது 34). இவரது மனைவி முத்துலட்சுமி(27). இவர்களது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சூலக்கரைபோலீசார் கோடீஸ்வரனின் கடைக்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையின் போது ரூ.79 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கோடீஸ்வரன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து முத்துலட்சுமியை கைது செய்தனர். கோடீஸ்வரனை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com