பெட்டிக்கடையில் பதுக்கிய புகையிலை பறிமுதல்

பெட்டிக்கடையில் பதுக்கிய புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
பெட்டிக்கடையில் பதுக்கிய புகையிலை பறிமுதல்
Published on

சிவகாசி,

சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் காதர் மற்றும் போலீசார் வெங்கடாசலபுரம் மேல தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர் வெங்கடாசலபுரம் துரைராஜ் மகன் வீரக்குமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து புகையிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த புகையிலைகளை வீரக்குமாருக்கு வினியோகம் செய்ததாக சிந்தப்பள்ளியை சேர்ந்த விஜயராஜ் (38) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com