கிராவல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கிராவல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
கிராவல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
Published on

ஆலங்குடி அருகே உருமநாதபுரம் பகுதியில் டிராக்டரில் கிராவல் மண் கடத்தப்படுவதாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், ஆலங்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் மறித்தனர். போலீசார் நிற்பதை பார்த்த டிரைவர் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் டிராக்டரை பரிசோதனை செய்தபோது, அதில் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பதிவு எண் இல்லாத டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய தெற்கு செட்டியாபட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com