கிருஷ்ணகிரி, ஓசூரில்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஓசூரில்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
Published on

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே ஆலப்பட்டி வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி ரோந்து சென்றார். அப்போது கொடுகூர் கிராமத்தில் நின்ற லாரியை அவர் சோதனை செய்தார். அதில் மண் கடத்தியது தெரிந்தது. இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், லாரியை பறிமுதல் செய்து டிரைவர் மற்றும் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி மற்றும் வருவாய்துறையினர் பாகலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நந்திமங்கலம் அருகே ஏரிக்கரையில் நின்ற லாரியை அவர்கள் சோதனை செய்தனர். அதில் கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து தாசில்தார் லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார். பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com