மண் கடத்திய பொக்லைன், 2 லாரிகள் பறிமுதல்

கோவில் நிலத்தில் இருந்து மண் கடத்திய பொக்லைன், 2 லாரிகள் பறிமுதல்
மண் கடத்திய பொக்லைன், 2 லாரிகள் பறிமுதல்
Published on

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்லஅள்ளி கிராமத்தில் கோம்பை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மண் அள்ளி கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் மாதையனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், வருவாய்த்துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்றார். வருவாய்த்துறை அலுவலர்களை பார்த்தவுடன் மண் அள்ளியவர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். அலுவலர்கள் விசாரணை நடத்தியபோது கோவில் நிலத்தில் இருந்து மண் அள்ளி கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மாதையன் கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து பொக்லைன் எந்திரம், 2 லாரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com