அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல்

ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல்
Published on

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் நகராட்சியின் அனுமதியோடு இயங்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பொட்டிக்கான்பள்ளம் பகுதியில் 2 கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் அனுமதி இன்றி இயங்கியது கண்டறியப்பட்டது.

அந்த வாகனங்களை நகராட்சி ஆணையாளர் ஜி. பழனி, சுகாதார ஆய்வாளர் குமார் ஆகியோர் திரவக் கழிவு மேலாண்மை விதிமுறைகளின்படி, பறிமுதல் செய்தனர்.

அந்த வாகனங்களின் ஆவணங்களை திருப்பத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆய்வு செய்ததில் ஒரு வாகனத்துக்கு அபராதம் விதித்து அரசு விதிமுறைகளின்படி உரிய உரிமம் பெற்று இயக்க அறிவுறுத்தி விடுவித்தார்.

மற்றொரு வாகனத்துக்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com