சபரிமலையில் 5 ஏக்கர் நிலம் வேண்டும்; கேரள அரசுக்கு சேகர்பாபு வலியுறுத்தல்

சபரிமலையில் 5 ஏக்கர் இடம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டும். அது தமிழக பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சேகர் பாபு கூறினார்.
திருவனந்தபுரம்,
பம்பையில் நடந்த சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக அமைச்சர் சேகர்பாபு பேசினார். அப்போது, "கேரளாவும், தமிழ்நாடும் என்றைக்கும் உறவோடு இருக்கிறது. சபரிமலையில் 5 ஏக்கர் இடம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டும். அது தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு-கேரளா எல்லையில் உள்ள கண்ணகி கோவிலின் பிரச்சினையை பேசி தீர்க்க வேண்டும்" என்றார்.
மற்றொரு தமிழக அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், கேரள அரசு சபரிமலையில் மேற்கொள்ள உள்ள ரெயில்பாதை, ரோப் கார், விமான நிலையம் ஆகிய நல்ல திட்டங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் துணையாக இருக்கும். இந்த சங்கமத்திற்கு அழைத்த கேரள அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சுவாமியே சரணம் அய்யப்பா..” என கூறி தனது உரையை அவர் முடித்தார்.
Related Tags :
Next Story






