12½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு

5,451 காலிப்பணியிடங்களுக்கு 12½ லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
12½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு
Published on

சென்னை,

குரூப்-4 தேர்வு

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய 5,451 காலிப்பணியிடங்களுக்கு கடந்த வருடம் நவம்பர் 6-ந் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வை 12 லட்சத்து 51 ஆயிரத்து 291 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு நேற்று www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வாளர்கள் அவர்களின் பதிவெண்ணை இணையதளத்தில் உள்ளடு செய்து அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை காணலாம். மேலும் அவர்களுக்கு உரிய சிறப்பு வரிசையை தெரிந்துகொள்ளலாம்.

கலந்தாய்வு

கலந்தாய்வுக்கு அழைக்கப்படுபவர்கள் பட்டியல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையை இணைய தளத்தில் வெளியிடப்படும். கலந்தாய்வு மார்ச் மாதம் 20-ந் தேதிக்கு பின்னர் நடைபெறும். தேர்வு எழுதியவர்களின் வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பம், தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு பணி கிடைக்கும்.

இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com