வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
Published on

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (மகளிர் திட்டம்) 21 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (மகளிர் திட்டம்) வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு காளையார்கோவில், திருப்பத்தூர், சிவகங்கை, இளையான்குடி, எஸ்.புதூர் ஆகிய வட்டாரங்களில் தலா 3 காலிப்பணியிடங்களும், கண்ணங்குடி வட்டாரத்தில் 2 காலிப்பணியிடங்களும், கல்லல், சாக்கோட்டை, சிங்கம்புணரி, திருப்புவனம் ஆகிய வட்டாரத்தில் தலா 1 காலிப்பணியிடத்திற்கும் என 21 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

18 வயது முதல் 28 வயது வரை உள்ளவாகள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடத்திற்கு எழுத்துத்தேர்வு மற்றும் நோமுக தோவின் அடிப்படையில் ஆட்கள்தேர்வு செய்யப்படுவார்கள். மாதாந்திர தொகுப்பு ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பங்கள்

பணியிடங்களுக்கு தேவையான கல்வித்தகுதிகள் மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை www.sivaganga.nic.in என்ற மாவட்ட இணையதளத்தின் மூலம் 26.7.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குனர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 10.8.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com