

கொடைக்கானல்,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 25-ந்தேதி கொடைக்கானலுக்கு வந்தார். கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் 3-வது நாளாக காலை 6.45 மணி அளவில் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் ஏரி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து கொடைக்கானல் ஏரிச்சாலையில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.
பின்னர் தங்கும் விடுதிக்கு புறப்பட்டு சென்றார். முதல்-அமைச்சர் நடைபயிற்சி சென்ற இடங்களிலும், அவர் காரில் வந்த சாலைகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டிருந்தனர்.