கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்

நெல்லையில் கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்.
கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்
Published on

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின்பேரில் போலீசார் ரோந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள்.

அதன்படி நெல்லை தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 20), சுடலை குமார் என்ற மாக்கான் (20) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் டவுன் பகவத்சிங் தெருவை சேர்ந்த தினேஷ் (21), காமாட்சி (20) ஆகியோரை கைது செய்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பாளையங்கோட்டை மரக்கடை தெருவை சேர்ந்த அருள்ஜோதி என்ற உசேன் (47) என்பவரிடமிருந்து சுமார் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். பாளையங்கோட்டை திருஞானசம்பந்தர் தெருவை சேர்ந்த அந்தோணி சிவா (23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பாலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com