நெல்லையில் கஞ்சா விற்பனை: மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த “மருந்து சரக்கு குற்றவாளிகள்” ஆவர்.
மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
Published on

திருநெல்வேலி,

நெல்லையில் கஞ்சா விற்பனை செய்து பொது ஒழுங்கு, பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

மருந்து சரக்கு குற்றவாளிகள்

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுடலைகண்ணு (வயது 22), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துகுமார் மகன் மகேஷ்(21) ஆகிய 2 பேர், திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த “மருந்து சரக்கு குற்றவாளிகள்” ஆவர்.

2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

இந்த நிலையில் மேற்சொன்ன 2 பேரும் திருநெல்வேலி டவுண் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று (10.9.2026) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com