ரூ.20 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.20 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
ரூ.20 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
Published on

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பருத்தி சந்தை நடைபெற்றது. இதில் 113 விவசாயிகள் விற்பனைக்காக 705 பருத்தி மூட்டைகளை வாரச்சந்தைக்கு கொண்டு வந்தனர். அதனை வியாபாரிகள் போட்டி போட்டு கொள்முதல் செய்தனர். இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 7519-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4,099-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 5,699-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4219-க்கும் விற்பனையானது. இதன் மூலம் .மொத்தம் ரூ.20 லட்சத்து 19 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இந்த தகவலை கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com