மோட்டார் சைக்கிளில் மதுபான விற்பனை - முதியவர் கைது

பங்களாப்புதூர் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த முதியவர் கைது.
மோட்டார் சைக்கிளில் மதுபான விற்பனை - முதியவர் கைது
Published on

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூர் போலீசார் நேற்று உப்புபள்ளம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை சோதனை செய்ததில், 25 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில், காளியூர் செல்லியபாளையம் பகுதியை சேந்த வேலுச்சாமி (65) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வேலுச்சாமி மீது வழக்கு பதிந்து கைது செய்த பங்களாப்புதூர் போலீசார் அவரிடம் இருந்த 25 மது பாட்டில்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com