ரூ.1 கோடியே 17 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.1 கோடியே 17 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையாகி உள்ளன.
ரூ.1 கோடியே 17 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
Published on

வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா ஆகிய 6 இடங்களில் உழவர்சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கிறார்கள்.

வெளிமார்க்கெட்டை விட காய்கறிகளின் விலை சற்று குறைவு என்பதால் பொதுமக்கள் பலர் உழவர்சந்தைகளில் காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மற்ற நாட்களை விட காய்கறிகள் விற்பனை அதிகளவு நடைபெறும். அதன்படி ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு கடந்த 22,23,24 ஆகிய 3 நாட்களில் 6 உழவர்சந்தைகளில் மொத்தம் 274 டன் காய்கறிகள், பழங்கள், மலர்கள் வகைகள் ரூ.1,17,44,110-க்கு விற்பனையானது. இதன் மூலம் 581 விவசாயிகள் பயன் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com