செல்லூர் ராஜூவின் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லை - மாணிக்கம் தாகூர்

முத்துராமலிங்கத்தேவரின் மறு உருவமாக அண்ணாமலை இருக்கிறார் என செல்லூர் ராஜூ கூறினார்.
செல்லூர் ராஜூவின் நகைச்சுவை உணர்வுக்கு  அளவே இல்லை - மாணிக்கம் தாகூர்
Published on

மதுரை,

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு தொகுதியில் தனக்காக பிரசாரம் மேற்கொள்ள வந்த அண்ணாமலை குறித்து பேசுகையில் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது சிங்கமாக, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். முத்துராமலிங்கத்தேவரின் மறு உருவமாக அண்ணாமலை இருக்கிறார் என்று கூறினார். இது குறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தேவர் ஐயாவை அவமதிக்கும் உங்களுடைய வார்த்தைக்கு மதுரை மேற்கு தொகுதி மக்கள் இந்த தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com