

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் 109 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய், போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் தென்னரசு 1,11,827 வாக்குகள் பெற்று, 41,664 வாக்குகள் முன்னிலையுடன் வெற்றியை உறுதி செய்துள்ளார். அதே சமயம், இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை 70,163 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். மேலும், இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பழனி 55,057 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் 9,813 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.