நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா- செல்வப்பெருந்தகை வாழ்த்து

உலக அரங்கில் இந்தியாவின் புகழை கொடி கட்டி பறக்க செய்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுகள் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
பிரக்ஞானந்தா- செல்வப்பெருந்தகை வாழ்த்து
Published on

சென்னை,

நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 20 வயதான பிரக்ஞானந்தா, இறுதிச் சுற்றில் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பட்டத்தை உறுதி செய்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதளத்தில் குறியிருப்பதாவது:-

சாம்பியன் பட்டம்

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

அங்கீகாரம்

செஸ் விளையாட்டில் உலக ஜாம்பவான்களை அதிர வைத்து நீங்கள் பெற்றுள்ள இந்த வெற்றி, கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகம். உலகின் முன்னணி வீரர்களுக்கு சவால் விடுத்து நீங்கள் பெற்றுள்ள இந்த வெற்றி, உங்களின் கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம்.

பல சிகரங்களை தொட வாழ்த்துகிறேன்

உலக அரங்கில் இந்தியாவின் புகழை கொடி கட்டி பறக்க செய்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுகள். வரும் காலங்களில் நீங்கள் இன்னும் பல சிகரங்களை தொட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com