செல்வவிநாயகர் கோவில் வருடாபிஷேக விழா

செல்வவிநாயகர் கோவில் வருடாபிஷேக விழா நடந்தது.
செல்வவிநாயகர் கோவில் வருடாபிஷேக விழா
Published on

மணிகண்டம்:

மணிகண்டம் ஒன்றியம், சூரக்குடிபட்டி கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவிலில் நேற்று வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று மாலை கோவிலில் சிவாச்சாரியார்கள் பல்வேறு யாகபூஜை நடத்தினர். இரவில் செல்வ விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் முன்புள்ள கலையரங்கில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. விழாவில் சூரக்குடிபட்டி, அளுந்தூர், குன்னத்தூர், சந்தனத்தான்குறிச்சி, நாகமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தரும், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான முத்துக்கருப்பன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திரவியராஜ் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com