செமிகண்டக்டர் சூழலமைப்புத் திட்டம்: முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார்

காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் “குறைக்கடத்தி மற்றும் மின்னணுவியல் பூங்கா” அமைக்கப்படும் என சட்டமன்றப் பேரவையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆகஸ்ட் 31-ம் தேதி அறிவித்தார்.
செமிகண்டக்டர் சூழலமைப்புத் திட்டம்: முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார்
Published on: 

சென்னை,

தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக உருவாக்கும் வகையில் முதல்-அமைச்சர் விஜய் செமிகண்டக்டர் சூழலமைப்புத் திட்டத்தை இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

செமிகண்டக்டர் சூழலமைப்புத் திட்டம்- முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (15.10.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு குறைக்கடத்தி (Semiconductor) சூழலமைப்புத் திட்டத்தை வெளியிட்டார். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்தி மையமாக உருவாக்கவும், குறைக்கடத்தித் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முக்கிய முன்னெடுப்பாக இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய், காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் “குறைக்கடத்தி மற்றும் மின்னணுவியல் பூங்கா” அமைக்கப்படும் என 31.8.2026 அன்று சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். மேலும், 2026-2027-ம் ஆண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கையின்போது, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, மத்திய அரசின் புதிய குறைக்கடத்தி ஊக்கத் திட்டத்துடன் இணைந்து, தமிழ்நாட்டில் அமையவுள்ள குறைக்கடத்தி நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப பிரத்யேக மாநில ஊக்கத்தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.

மத்திய அரசு ஒப்புதல்

சிப் வடிவமைப்பு, குறைக்கடத்தி உற்பத்திக்கான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், வேஃபர் ஃபேப்ரிகேஷன் (Fabs), ATMP/OSAT ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு உள்ளிட்ட முழுமையான குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு 15.07.2026 அன்று Semicon India Programme 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் நிதி உதவி

தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்பு திட்டமானது இரண்டு பிரிவுகளின்கீழ் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. மத்திய அரசின் Semicon 2.0 / India Semiconductor Mission திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடுதலாக தமிழ்நாடு அரசு கூடுதல் ஊக்கத்தொகைகள் மற்றும் ஆதரவுகளை வழங்கும்.

தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை

மேலும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இடம்பெறாத போதிலும், தமிழ்நாட்டின் குறைக்கடத்தி சூழலமைப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் தகுதியான முதலீட்டுத் திட்டங்களுக்கு, தமிழ்நாடு அரசு தேவைக்கேற்ப தனித்துவமான ஆதரவு மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் பல்லவி வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com