திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் கருத்தரங்கம்

இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்து திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் கருத்தரங்கம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் கருத்தரங்கம்
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்த கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், விஜயகுமார், முதுகலை தமிழாசிரியர் பாஸ்கரன் ஆகியோர் வரவேற்றனர்.திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் கலந்து கொண்டு இணைய வழி குற்றங்களை எவ்வாறு தடுப்பது குறித்து பேசினார். இதில் இணையவழி குற்றங்கள் குறித்து வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியர்கள் கழக செயலாளர் முகமது ரபிக் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நடராஜன் சுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com