கடின உழைப்பு மற்றும் சுயதிறன் மூலம் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டவர் தோனி -துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

பாதகமான சூழலை சாதகமாக மாற்றுபவர் கேப்டன் கூல் தோனி என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
கடின உழைப்பு மற்றும் சுயதிறன் மூலம் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டவர் தோனி -துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்திய மகேந்திர சிங் தோனி நேற்று ஓய்வு பெற்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடவுள்ளார். இதற்கான பயிற்சி முகாமில் பங்குபெற தற்போது சென்னை வந்துள்ளார் தோனி. இந்நிலையில், தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியின் ஓய்வு அறிவிப்பை அடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் கிரிக்கெட்,திரை பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது: கடின உழைப்பு மற்றும் சுயதிறன் மூலம் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டவர் தோனி. பாதகமான சூழலை சாதகமாக மாற்றுபவர் 'கேப்டன் கூல்' தோனி என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com