சஞ்ஜீப் பானர்ஜியை மாற்றும் முடிவை கைவிடுக: கொலீஜியத்துக்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம்

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை மாற்றும் முடிவை கைவிடக் கோரி கொலீஜியத்துக்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியின் இடமாற்ற பரிந்துரையையும், நீதிபதி சிவஞானம் இடமாற்றம் செய்யப்பட்டதையும் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென சென்னை பார் அசோசியேசன் அவசரப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி சிவஞானம் இடம் மாற்றத்தையும், மேகலாயாவிற்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் பரிந்துரையையும் மறுபரிசீலனை செய்யக் கோரி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென மூத்த வழக்கறிஞர் வி.ரங்கபாஷ்யம் தலைமையிலான 4 பேர் கொண்ட எம்.பி.ஏ.வின் இடைக்கால நிர்வாக குழுவிற்கு கடிதம் கொடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று காணொலி காட்சி மூலம் சென்னை பார் அசோசியேசன் அவசர பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பி.எஸ்.ராமன், என்.ஜி.ஆர்.பிரசாத், வி.பிரகாஷ், பார்த்தசாரதி, ஜி.கார்த்திகேயன், ஆதிலட்சுமி லோகமூர்த்தி, ஷான் கட்டாரி வி.ஆர்.கமலநாதன் உள்ளிட்ட 92 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட 92 பேரில் ஒருவரை தவிர மற்றவர்கள் ஏற்றதால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயாவுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வழக்கறிஞர்கள் 237 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதிஇருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com