இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மரணம்

இந்திய கம்யூ. செயற்குழு உறுப்பினர், மாநில செயலாளர் பதவிகளையும் வகித்து மக்கள் சேவை செய்தவர் நல்லக்கண்ணு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மரணம்
Published on

சென்னை,

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி திடீரென நல்லகண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பினார்.

பின்னர், மீண்டும் சில மாதங்களுக்கு பின்னர் நல்லகண்ணுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணு வுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதாக ஆஸ்பத்திரியின் டீன் கூறினார். இதனையடுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலை வர்கள் நேரில் சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் சிறிது மாதங்களுக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். அவ்வப்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நல்லக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

வயது மூப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நல்லக்கண்ணுவின் உயிர் பிற்பகல் 1.55க்கு பிரிந்தது. நல்லக்கணுவை இழந்துவாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜுவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

01.02. 2026 அன்று திரு நல்லக்கண்ணு அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தது. பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், திரு. நல்லக்கண்ணு அவர்கள் 25. 02. 2026 அன்று பிற்பகல் 1 55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும். உறவினர்களுக்கும் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக்குழுக்களுக்கும். தமிழக அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லகண்ணுவின் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com