துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள் சந்திப்பு
Published on

சென்னை,

சென்னை தலைமை அலுவலகத்தில் மூத்த அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி, சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.

அமைச்சர் ஜெயக்குமார் அறையில் 10- க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இல்லத்திற்கு மூத்த அமைச்சர்கள் சென்றனர். துணை முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். துணை முதல்வரை சந்தித்த பின் முதல் அமைச்சரை அமைச்சர்கள் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி விட்டு துணை முதல்வரை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com