செந்தில் பாலாஜி வழக்கு: ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவு வந்த உடன் மற்ற 2 மனுக்கள் மீது விசாரணை - நீதிபதி அல்லி அறிவிப்பு

ஆட்கொணர்வு மனு மீது இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜி வழக்கு: ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவு வந்த உடன் மற்ற 2 மனுக்கள் மீது விசாரணை - நீதிபதி அல்லி அறிவிப்பு
Published on

சென்னை,

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ளார். இதனிடையே சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது வழக்கின் பின்னணி, கைதுக்கான காரணம், கைது நேரம் உள்ளிட்டவை குறித்து நீதிபதிகள் விசாரித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், ஆட்கொணர்வு மனு மீது இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவு வந்த உடன், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு, அமலாக்கப்பிரிவு சார்பில் செந்தில் பாலாஜிக்கு 15 நாட்கள் காவல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகிய 2 மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com