புழல் சிறையில் செந்தில்பாலாஜியின் 6 இலக்க கைதி எண் இதுதான்..!

செந்தில்பாலாஜிக்கு விசாரணை கைதி எண் 1440 ஒதுக்கப்பட்டுள்ளதாக புழல் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புழல் சிறையில் செந்தில்பாலாஜியின் 6 இலக்க கைதி எண் இதுதான்..!
Published on

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கான பாதுகாப்பு பொறுப்பை நேற்றிரவு 10 மணியளவில் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். சிறைத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.

இந்தநிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புழல் சிறையில் கைதி எண் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜிக்கு புழல் சிறையில் விசாரணைக்கைதி 1440 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கைதிக்கான பதிவேடு எண் - 001440 என்ற எண் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளதாக புழல் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com