செந்தில் பாலாஜி அமைச்சராக தடையில்லை: வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ

ஜாமீனில் விடுதலையாகும் செந்தில் பாலாஜி அமைச்சராக எந்த தடையும் இல்லை என்று வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக தடையில்லை: வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ
Published on

புதுடெல்லி,

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது.

இதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. நிபந்தனையுடன் கூடிய ஜாமீன், செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் அளித்துள்ள நிலையில், சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார். இதனிடையே, செந்தில் பாலாஜி அமைச்சராக எந்த தடையும் இல்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகள் குறித்து என்.ஆர் இளங்கோ கூறியதாவது:

ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் ஜாமின் கொடுக்க வேண்டும்; ஒவ்வொரு திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்; குற்றவியல் நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்; சாட்சிகளை கலைக்க கூடாது ஆகிய நிபந்தனைகளை விதித்துள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக எந்த தடையும் இல்லை" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com