மின் துறையை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர் செந்தில்பாலாஜி - அமைச்சர் நிர்மல் குமார்

மின்சார வாரியத்தின் கட்டமைப்புகள் கடந்த 12 ஆண்டுகள் பின் தங்கியுள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
மின் துறையை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர் செந்தில்பாலாஜி - அமைச்சர் நிர்மல் குமார்
Published on

தேனி,

தேனி மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மத அரசியலை தமிழகம் விரும்பாது. தலைவரும் விரும்பமாட்டார். தமிழகத்தில் என்றும் மதத்தை வைத்து அரசியல் செய்ய தமிழக மக்களுக்கும் விரும்ப மாட்டார்கள். எங்கள் தலைவரும் விரும்ப மாட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமான தீர்வை கொண்டுவருவோம். கடந்த திமுக ஆட்சியில் தவறாக கையாண்டதன் விளைவுதான் இந்த பிரச்சனையை இவ்வளவு தூரம் கொண்டுவந்து விட்டிருக்கிறது. மேகதாது விவகாரத்தை திமுக சரியாக கையாளவில்லை.

மின்வெட்டு பிரச்சினை

மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மின்சார கட்டமைப்பில் 12 ஆண்டு பின்னோக்கி உள்ளது. சீரமைத்து வருகிறோம். 4 நாட்களாக எங்கெல்லாம் மின் தடை என ஆராய சென்னையில் 500 பேர் கொண்ட குழு இரவு முழுவதும் ரோந்து செல்கின்றனர்.

வெள்ளை அறிக்கை

மின்சார வாரியத்தின் கட்டமைப்புகள் கடந்த 12 ஆண்டுகள் பின் தங்கியுள்ளது. மின்சார வாரியத்தை சீரமைத்து வருகிறோம். இந்த துறையை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர் செந்தில்பாலாஜி. இந்த அரசு பொறுப்பேற்றதும் ஊழல் தடுக்கப்பட்டிருக்கிறது. மின்சார வாரியத்தின் கட்டமைப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையாக வெளியிடுவோம். தமிழ்நாட்டில் நேற்று 29 இடங்களில் ஏற்பட்ட மின் தடையை மின்வாரியம் சீரமைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்க முடியாத துயரத்தில் நள்ளிரவிலும் பொதுமக்கள் சாலைகளுக்கு வந்து போராடிக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை வாயிலாக குற்றஞ்சாட்டியிருந்தார். பியூஸ் கேரியரை திருடுகிறார்கள் என்று சொல்லி சிசிடிவி கேமரா வீடியோவை அமைச்சர் நிர்மல் குமார் பதிவிட்டதை சுட்டிக்காட்டியுள்ள செந்தில் பாலாஜி, பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com