செந்தில் பாலாஜியின் ஆபரேசனை நேரு விளையாட்டு அரங்கத்திலா நடத்த முடியும்...! அமைச்சர் மா.சுப்ரமணியன் கேள்வி

செந்தில் பாலாஜியின் ஆபரேசனை நேரு விளையாட்டு அரங்கத்திலா நடத்த முடியும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கேள்வி எழுப்பினார்.
செந்தில் பாலாஜியின் ஆபரேசனை நேரு விளையாட்டு அரங்கத்திலா நடத்த முடியும்...! அமைச்சர் மா.சுப்ரமணியன் கேள்வி
Published on

சென்னை,

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது :

தமிழ்நாட்டில் 103 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் 11 இடங்களிலும், மதுரையில் 6 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முகாமிலும் 2000க்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீர்,எக்கோ, இசிஜி,மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் , காசநோய் உள்ளிட்ட நோய் தொடர்பான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம் குறித்த ஆலோசனை வழங்கப்படுகிறது.

வருமுன் காப்போம் திட்டம் கடந்த 10 ஆண்டுகள் முன்பு சிறப்பாக செயல்பட்டது,

இந்தியாவிற்கு வழிகாட்டும் திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி.

அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்த மருத்துவ முகாமை நடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் ஒன்றியங்களில் 1050 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டோம். ஆனால் கூடுதலாக முகாம் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டு நாட்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சையில் வெளிப்படைத்தன்மையில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகின்றன. இருதய அறுவை சிகிச்சையை 15 ஆயிரம் பேர் முன்னிலையில் நேரு ஸ்டேடியத்தில் வைத்து செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com