அமைச்சர்கள் இருக்கையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி பெயர்கள் நீக்கம்

புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மனோ தங்கராஜ் இன்று மாலை அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதனால், அமைச்சரவை முதல் வரிசையில் இருந்து பொன்முடி பெயரும், 2-வது வரிசையில் இருந்து செந்தில் பாலாஜி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மனோ தங்கராஜ் இன்று மாலை அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறார்.

அதன் பிறகே, அமைச்சர்கள் இருக்கை வரிசையில் அவரது பெயர் இடம்பெறும். நாளை நிறைவு நாள் சட்டசபை கூட்டத்தின்போது, அமைச்சர்கள் வரிசையில் மனோ தங்கராஜ் இடம்பெறுவார். செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் 3-வது வரிசையான முன்னாள் அமைச்சர்கள் இருக்கையில் அமருவார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com