"போதை பொருள் ஒழிப்புக்கு தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு

திண்டிவனத்தில் பாமக சார்பில் பொது நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது.
"போதை பொருள் ஒழிப்புக்கு தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு
Published on

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தேட்டத்தில் பாமக சார்பில் பொது நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது. நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிட்ட போது பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத்தலைவர் ஜி.கே.மணி உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

நிழல் நிதி அறிக்கையை வெளியிட்டு பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பரந்தூர் விமான நிலையம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு திட்டம் போன்றவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

தெடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டிற்கான நிழல் நிதி நிலை அறிக்கையில் போதைப் பொருட்களால் அழிவு பாதைக்கு செல்லும் இளைஞர்களை மீட்டு ஆக்க பாதைக்கு அழைத்து செல்வதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

போதைப் பொருள் ஒழிப்பு தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com