அறிவு நுட்பத்துடன் குச்சிகள், இரும்பு கம்பிகளை தரம் பிரித்து கூடு கட்டிய காகங்கள்

திருச்சியில் குச்சிகள், இரும்பு கம்பிகளை தரம் பிரித்து அறிவு நுட்பத்துடன் காகங்கள் கூடு கட்டியது மக்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியது.
அறிவு நுட்பத்துடன் குச்சிகள், இரும்பு கம்பிகளை தரம் பிரித்து கூடு கட்டிய காகங்கள்
Published on

திருச்சி,

ஒற்றுமைக்கு பெயர் பெற்ற பறவையினங்களாக காகங்கள் கூறப்படுகின்றன. அவை புத்திசாலியாகவும் செயல்படுபவை. இதற்கு எடுத்துக்காட்டாக, பிரான்சின் மேற்கு பகுதியில் புய் டு பவ் என்ற பூங்காவில் உணவு பெறுவதற்காக குப்பைகளை அதற்குரிய தொட்டியில் காகங்கள் போடுகின்றன.

அவை பூங்காவை சுற்றியுள்ள சிகரெட் துண்டுகள் மற்றும் சிறிய அளவிலான குப்பை பொருட்களை எடுத்து வந்து பெட்டி ஒன்றில் போடுகின்றன. அவற்றின் நல்ல செயலுக்கு பரிசாக அதில் இருந்து உணவு பொருட்கள் வெளிவருகின்றன. அதனை எடுத்து கொண்டு அவை அங்கிருந்து செல்கின்றன.

இதேபோன்று தமிழகத்திலும் இரண்டு காகங்கள் கூடு கட்டுவதற்காக அறிவு நுட்பத்துடன் செயல்பட்டு உள்ளன. பொதுவாக காகங்கள் கூடு கட்டும்பொழுது, காற்றில் அசைந்து விடாதபடிக்கும், கூடு கெட்டியாக மரத்துடன் இருக்கும் வகையிலும் வலுவாக அமைக்கும்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மதுரை சாலையில், இரண்டு காக்கைகள் கூடு கட்டிய, அறிவு நுட்பம் பலரையும் வியக்க வைத்தது. இரும்பு கம்பிகளை வைத்து அஸ்திவாரம் அமைக்க நினைத்த காக்கைகள், ஒலியை வைத்து, குச்சிகளையும் இரும்பு கம்பிகளையும் தரம் பிரித்தன.

அவை பின்னர் கூட்டின் அடி பகுதியை இரும்பு கம்பிகளால் வலுவாக அமைத்துள்ளன. கூட்டின் மேல் பகுதிக்கு மெல்லிய குச்சிகளை பயன்படுத்தி உள்ளன. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் வியந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com