செப்டம்பர் 5: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
Published on

சென்னை,

தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 3,98,366 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,859 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு 51,583 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் இன்று மட்டும் 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 7,748 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,40,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 160 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 64 அரசு மருத்துவமனைகளிலும், 96 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை 52,12,534 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 81,793 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், பலியானவர்கள் மாவட்டம் வாரியாக விவரம் வருமாறு:-

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com