சிறுமிக்கு தொடர் பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

நெல்லை புதுப்பேட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர், ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து ஒரு சிறுமியின் மீது பாலியல் தாக்குதல் செய்து வந்துள்ளார்.
சிறுமிக்கு தொடர் பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
Published on: 

நெல்லை,

நெல்லையில் ஒரு சிறுமியை தொடர் பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திருநெல்வேலி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறுமிக்கு தொடர் பாலியல் தாக்குதல்

நெல்லை புதுப்பேட்டையைச் சேர்ந்த சந்திரன் மகன் தனராஜ் (வயது 40) என்பவர் ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து ஒரு சிறுமியின் மீது பாலியல் தாக்குதல் செய்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அந்த நபர் மீது பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2025-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையின் முடிவில் இன்று (13.11.2026) மேற்சொன்ன நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திருநெல்வேலி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அந்த சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கிடவும் பரிந்துரை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் பாராட்டு

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) சரவணன், போலீஸ் உதவி கமிஷனர் (பாளையங்கோட்டை சரகம்) சிவசக்தி, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாககுமாரி, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த நீதிமன்ற காவலரும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருமான ரேணுகா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்குரைஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேசர் சஞ்சய் பாராட்டினார்.

X