லாரி மோதி முதியவர் படுகாயம்

லாரி மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.
லாரி மோதி முதியவர் படுகாயம்
Published on

தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ள உறுதிகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 70) ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவர் நேற்று சருகனி சாலையில் இருந்து மாரிச்சான்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தொண்டியில் இருந்து பழனி அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டிக்கு வைக்கோல் ஏற்றி சென்ற லாரி, பாலசுப்ரமணியன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக காரைக்குடி ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் காளிமுத்து (26) என்பவரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com