விண்டோஸ் பாதிப்பு எதிரொலி... சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

விமான நிலையத்தில் பயணிகளுக்கு கையால் எழுதப்பட்டுள்ள போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
விண்டோஸ் பாதிப்பு எதிரொலி... சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு
Published on

சென்னை,

மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம் இன்று மதியம் திடீரென முடங்கியது. இதனால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக, விமான துறை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன.

விண்டோஸ் மென்பொருள் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்டோஸ் பாதிப்பு காரணமாக விமான நிலையத்தில் பயணிகளுக்கு கையால் எழுதப்பட்டுள்ள போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மட்டுமின்றி, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலகில் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமானத்தில் பயணம் மேற்கொள்ளவிருந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விண்டோஸ் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் பணிகளில் அந்நிறுவனமானது முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com