துணை தபால் நிலையத்தில் சர்வர் கோளாறு

துணை தபால் நிலையத்தில் சர்வர் கோளாறு
துணை தபால் நிலையத்தில் சர்வர் கோளாறு
Published on

நாகை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் துணை தபால் நிலையத்தில் சர்வர் கோளாறால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

துணை தபால் நிலையம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் துணை தபால் நிலைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, ஆர்.டி. (மாதாந்திர வைப்புதிட்டம்), வருங்கால வைப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகிய கணக்குகளில் ஏராளமான வாடிக்கையாளர்கள், தபால் நிலைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்து, மணி ஆர்டர், ஸ்பீடு போஸ்ட் உள்ளிட்ட சேவைகளும் உள்ளன.

சர்வர் கோளாறு

முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாகை கலெக்டர் அலுவலக துணை தபால் நிலையத்தில் கடந்த சில நாட்களாக சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதுபோக ஊழியர்கள் பற்றாக்குறை, கணினி பழுது உள்ளிட்டவைகளால் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் சேவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கணினி சர்வர் சரியாக வேலை செய்யாததால், தபால் சேவைகள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக ஆர்.டி. போன்ற திட்டங்கள் மூலம் பணம் செலுத்தியவர்கள், பணம் எடுக்க முடியாமல் பல மாதங்களாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே நாகை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் துணை தபால் நிலையத்தில் சர்வர் கோளாறு சரி செய்ய வேண்டும். ஊழியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com