ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசம்

அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசம்
Published on

சென்னை,

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும். மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது யார், சசிகலா குடும்பம். சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார் .

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் செய்யவில்லை? செய்ய வேண்டாம் என சொன்னது யார்?. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை . ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com