தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் குடியேறும் போராட்டம்

தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் குடியேறும் போராட்டம் நடத்த முயன்றனர்.
தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் குடியேறும் போராட்டம்
Published on

திருவரங்குளம்:

திருவரங்குளம் அருகே கைகுறிச்சி ஊராட்சி தோப்பு கால்லை பாப்பாபட்டி பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றனர். இதையடுத்து பாப்பாபட்டியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான பூர்விக இடத்தை வேறு யாருக்கும் இலவச பட்டா வழங்க கூடாது. இந்த இடத்தை எங்களுக்கே வழங்க வேண்டும் என்று கூறி தோப்பு கொல்லை அருகே பாப்பாபட்டி பொதுமக்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடத்த அந்த இடத்தில் பொக்லைன் எந்திரம் வைத்து சுத்தம் செய்து கொட்டகை போட்டு ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வல்லாத்திராகாட்டை போலீசார் மற்றும் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, வருவாய் கோட்டாட்சியர் போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com