

அரக்கோணத்தை அடுத்த பெருமூச்சி ஊராட்சி அகன் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, அம்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் நரேஷ் காந்த் உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.