ரெயிலில் அடிபட்டு தையல் தாழிலாளி சாவு

ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ரெயிலில் அடிபட்டு தையல் தாழிலாளி சாவு
Published on

விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் தங்கமணி (வயது 62). இவர் இந்நகர் சுலோச்சனா தெருவில் தையல் கடை வைத்துள்ளார். நேற்று மாலை வாடிப்பட்டி கோவிலுக்கு சென்று விட்டு கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் விருதுநகர் திரும்பினார். ரயிலில் இருந்து இறங்கி ரயில் பாதையை கடந்த போது திருச்செந்தூர்- பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். விருதுநகர் ரயில்வே போலீசார் அவரை உடனடியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி விருதுநகர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com