பாலியல் வழக்கு: திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

ராஜா ரகுபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலியல் வழக்கு: திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
Published on: 

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில், ராமசாமி கோவில் அருகே உள்பட பல்வேறு இடங்களில் தங்கும் விடுதிகள், அழகு நிலையங்களில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் 10 பெண்களை மீட்டு திருச்சி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர். மேலும் தனியார் தங்கும் விடுதி உரிமையாளரான தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜா ரகுபதி மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், கும்பகோணத்தில் பாலியல் தொழில் நடத்திய வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகி ராஜா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராஜா ரகுபதி கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com