14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர், 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

சென்னையை சேர்ந்த ரிஷி (வயது 21) என்பவர், 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

இது தொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரிஷியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, குற்றவாளி ரிஷிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com