15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில், மதுரையைச் சேர்ந்த ஒருவர், 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தார்.
போக்சோ குற்றவாளி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திகேயன் (வயது 32) என்பவரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை:

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா நேற்று மேற்சொன்ன கார்த்திகேயனை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.17,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com