15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

ஊட்டியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Published on

நீலகிரி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 20). இளங்கலை பொருளாதாரம் படித்து வந்த இவர், சில காரணங்களுக்காக படிப்பை பாதியில் விட்டார். பின்னர் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு, சமூக வலைத்தளம் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி அறிமுகம் ஆனார். அவர்கள் நீண்ட நாட்களாக பேசி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் நாகராஜ் அவ்வப்போது ஊட்டி வந்து அந்த சிறுமியை சந்தித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உட னடியாக ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் சிக்னல் மூலம் நாகராஜ், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த விடுதியில் சிறுமியும் இருந்தார்.

உடனே சிறுமியை போலீசார் மீட்டனர். பின்னர் நடந்த விசாரணையில் திரு மணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை நாக ராஜ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து நாகராஜை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com