கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: எல்.முருகன் கண்டனம்

கும்மிடிப்பூண்டி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.
எல்.முருகன்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு தீராத பிரச்னையாக இருப்பது வேதனையை தருகிறது. உறுதியான நடவடிக்கைகள் இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது ஏன்?

அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிங்கப் பெண்கள் படையை அமைத்துள்ளதாக தவெக அரசு கூறுகிறது. ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு இன்னமும் கேள்விக்குரியாகி இருப்பது ஏன்? இதுபோன்ற சம்பவங்களில் தமிழக அரசும், காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. கும்மிடிப்பூண்டி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.

போதைப் பொருள்களின் நடமாட்டம், அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் தவெக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com