சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; முதியவர் போக்சோவில் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; முதியவர் போக்சோவில் கைது
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியன்(வயது 54). கூலித்தொழிலாளி. இவர், பள்ளிக்கு சென்று வந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா வழக்குப்பதிவு செய்து கலியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com